உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விடங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்!

விடங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்!

கிள்ளை: சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கன் ஸ்ரீபர்தவம்பாள் சமேத விடங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கனில் ஸ்ரீபர்தவம்பாள் சமேத விடங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷ வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் விமர்சியாக நடைபெறுவது வழக்கம். கடந்த 25ம் தேதி  பிரதோஷத்தை முன்னிட்டு நத்திக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. கோவில் பிரகாரத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடந்தது. நேற்று உபயதாரர் சென்னை மடிப்பாக்கம் ராமதாஸ் கற்பகம் குடும்பத்தினர் சார்பில் 25 கிலோ அரிசி வடித்து சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்தனர். கோவில் அறங்காவலர் குமார், அர்ச்சகர் ஜெகதீசன் மற்றும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !