உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படவேட்டம்மனுக்கு காய்கறி அலங்காரம்!

படவேட்டம்மனுக்கு காய்கறி அலங்காரம்!

திருத்தணி: படவேட்டம்மனுக்கு, நேற்று, காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.திருத்தணி மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் கோவிலில், ஐப்பசி மாதம் மற்றும் நவராத்திரி நிறைவு விழாவையொட்டி நேற்று, மூலவர் அம்மனுக்கு, 15 வகையான காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இன்று, பவுர்ணமியை முன்னிட்டு, இரண்டாவது நாளாக, காய்கறி அலங்காரத்தில், மூலவர் படவேட்டம்மன், பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !