உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசுபதீஸ்வரர் கோவில் கோசாலை பராமரிக்காததால் பக்தர்கள் கவலை

பசுபதீஸ்வரர் கோவில் கோசாலை பராமரிக்காததால் பக்தர்கள் கவலை

கரூர்: கரூர் ஈஸ்வரன் கோவில் கோசாலையில் உள்ள பசுக்கள், சரிவர பராமரிப்பின்றி இருப்பதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். கரூர் பசுபதீஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் வளாகத்தில் கோசாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோசாலையில், ஒரு ராட்ஷச பேனும் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தானமாக வழங்கிய, ஆறு பசுமாடு வளர்க்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோசாலை பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்து வருகின்றனர். அதுபோல், மாடுக்களுக்கான தீவனங்களும் வழங்கப்படுகிறது. கோசாலையல் உள்ள தண்ணீர் தொட்டி மற்றும் தீவனம் போட பயன்டும் தொட்டிகள், கழிவுகள் நிறைந்து சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது. இதனால், கோசாலை துர்நாற்றம் வீசி பக்தர்களை முகம் சுழிக்க வைக்கிறது. பசுமாடுகளின் கண்களில் இருந்து தண்ணீர் வடிவதுடன் சோர்ந்து காணப்படுகிறது. எழுந்திருக்க முடியாமல் மாடுகள் படுத்தே கிடக்கிறது. கோசாலை பராமரிப்பாளர்களும், இங்கே இருப்பதில்லை. இதனால் பசுமாடுகள் நாள்தோறும் அவதிப்பட்டு வருகிறது. இதைக் கவனிக்க வேண்டிய கோவில் நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பதாக, பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, கரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் சிவசாமி கூறுகையில், பசுமாடுகள் என்பது தெய்வத்துக்கு சமமானது. அதை சரிவர பராமரிக்கப்படமல் இருப்பது, தெய்வத்துக்கு செய்யும் துரோகம். கோவில் நிர்வாகம் கோசாலையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !