பாதாள காளியம்மன் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :3638 days ago
சாயல்குடி: காணிக்கூர் பாதாள காளியம்மன் கோயிலில் பவுர்ணமி தின விளக்கு பூஜை நடந்தது. அம்மனுக்கு பால், நெய், இளநீர், பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. இரவு பத்து மணியளவில் அம்மனுக்கு விளக்கேற்றினர். ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். அன்னதானம் நடந்தது.