குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நவ.7ல் செம்பை சங்கீத உற்சவம்!
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம், நவ.,7 முதல் 22 வரை நடக்கிறது. 2,500 இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர் முதல் நாள் மாலை 6:30 மணிக்கு, குருவாயூர் கோவிலில் நடக்கும் விழாவை, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த பூயம் திருநாள் கவுரி பார்வதிபாய் துவக்கி வைக்கிறார். இந்தாண்டுக்கான குருவாயூர் தேவஸ்தானத்தின் செம்பை நினைவு விருது, இசைக்கலைஞர் துரைக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக அன்று காலை, செம்பையில் இருந்து, செம்பை வைத்தியநாத பாகவதர் பயன்படுத்திய தம்புராவை, அலங்கரித்த வாகனத்தில் ஊர்வலமாக குருவாயூர் கொண்டு வருகின்றனர். தேவஸ்தான தலைவர் சந்திரமோகன் தம்புராவை ஏற்கிறார்.மறுநாள் முதல், காலை, மாலையில் இசைக்கச்சேரிகள் நடக்கின்றன. நவ.,21 காலை 9 மணிக்கு, பஞ்சரத்ன கீர்த்தனை இசைக்கின்றனர். ஏகாதசி திருவிழா நாளான நவ.,22 இரவு 9 மணிக்கு நடக்கும் கச்சேரியுடன் சங்கீத உற்சவம் நிறைவு பெறுகிறது. திருவிழா சிவானந்தன், பாலா சி.கே.ராமச்சந்திரன், திருவனந்தபுரம் சுரேந்திரன், வைக்கம் வேணுகோபால், ஹரி, செம்பை சுரேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஏற்பாடுகளை செய்கின்றனர்.