காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் ஆவணப் படம் தயாரிப்பு!
ADDED :3693 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில், திரைப்பட படப்பிடிப்பு நடப்பதாக வந்த செய்தியை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம், கைலாசநாதர் கோவிலில் நேற்று காலை, திரைப்பட படப்பிடிப்பு நடப்பதாக தகவல் பரவியது. நடிகர் நடிகையர் வந்திருப்பர் என, நினைத்து, பொதுமக்கள் குவிந்தனர்.விசாரணையில், தொல்லியல் துறை சார்பில், கோவிலை பற்றிய ஆவணப்படம் தயாரிக்கும் குழு வந்ததாக தெரியவந்தது.