உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அல்மட்டி ஹனுமன் கோவில் ரூ.73 லட்சம் உண்டியல் வசூல்

அல்மட்டி ஹனுமன் கோவில் ரூ.73 லட்சம் உண்டியல் வசூல்

பெலகாவி: அல்மட்டி அருகிலுள்ள ஹனுமன் கோவிலில், எட்டு ஆண்டுகளுக்கு பின் உண்டியல் திறக்கப்பட்ட நிலையில், 73 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்து உள்ளது.கடந்த, 2008ல், கோவில் கமிட்டிக்கும், கோவில் நிர்வாக கமிட்டிக்கும் ஏற்பட்ட மோதலால், கோவில் உண்டியல் திறக்கப்படாமல் இருந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி, அந்த உண்டியலை கைப்பற்றிய அரசு, தங்கள் பாதுகாப்பில் வைத்திருந்தது. சமீபத்தில், இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால், உண்டியலை திறந்து காணிக்கை பணத்தை எண்ண, அரசு அனுமதியளித்தது. இதன்படி, 30 கிராம கணக்கர்கள், சிண்டிகேட் வங்கி ஊழியர்கள், 20 பேர், விஜயபுரா கலெக்டர் பரசுராம் மதார் தலைமையில் உண்டியலை திறந்தனர்.உண்டியல் பணத்தை எண்ணி முடிக்க, 20 மணி நேரமானது. உண்டியலில், 73 லட்சம் ரூபாய் ரொக்கமும், சில தங்க நகைகளும் இருந்தன. இதில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் சேதமடைந்துஉள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !