துாத்துக்குடி கோவிலில் 3 கோடி ரூபாய் செலவில் திருப்பணி
ADDED :3635 days ago
சென்னை: துாத்துக்குடி பாகம்பிரியாள் சங்கர ராமேஸ்வரர் கோவில் மற்றும் வைகுண்டபதி பெருமாள் கோவிலில், 2003ல் கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம விதிமுறைப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். எனவே, இரு கோவில்களிலும், கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, மூன்று கோடி ரூபாய் செலவில், திருப்பணி நடைபெற்று வருகிறது. டிசம்பருக்குள் திருப்பணிகளை முடிக்கவும், ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்தவும், கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.