சித்தி விநாயகர் கோவில் உண்டியல் உடைப்பு
ADDED :3635 days ago
காரைக்கால்: வரிச்சிக்குடி சித்தி விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோட்டுச்சேரி வரிச்சிக்குடி மெயின் ரோட்டில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்து, கோவில் நடை மூடப்பட்டது. நேற்று காலை, கோவிலை சுத்தம் செய்ய சென்றபோது உண்டியல் உடைக்கப்பட்டது தெரிய வந்தது. கோட்டுச்சேரி சப் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.