உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் கார்த்திகைப் பெருவிழா

பழநி கோயிலில் கார்த்திகைப் பெருவிழா

பழநி: பழநிகோயிலில் திருமுருக பக்தசபா சார்பில் ஐப்பசி கார்த்திகை பெருவிழா நடந்தது. திருக்கார்த்திகை விழாவைமுன்னிட்டு திருஆவினன்குடி கோயிலில் பகல் 12 மணிக்கு குழந்தை வேலாயுதசுவாமி, சனிபகவான், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பழநிமலைக்கோயில் ஞானதண்டாயுதபாணிக்கு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டது. பகல் 2 மணிக்குமேல் ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமலைசாமி, பேராசிரியர் தேவியின் சொற்பொழிவு, பக்தி இன்னிசை நடந்தது. மாலை 6.30மணிக்கு 108 திருவிளக்கு பூஜையில் பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !