உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் பகவதியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு

கரூர் பகவதியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு

கரூர்: கரூர் அடுத்த, லாலாப்பேட்டை கடைவீதியில் உள்ள பகவதியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, கோவில் கும்பாபிஷேகம், கடந்த, செப்., 9ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. தினமும், உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம், அன்னதானம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம், 48வது நாள் மண்டல பூஜை நிறைவு நிகழ்ச்சியில், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. லாலாப்பேட்டையில் பகவதியம்மனுக்கு, 150 கிலோ இனிப்புகளை கொண்டு, அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !