ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் தீபாவளி விழா
ADDED :3627 days ago
கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் வள்ளலார் அறநிலையம், அன்பு இல்லம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்களுடன் இணைந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. முன்னதாக மூலவர்கள் விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை குருசாமி வல்லபை மோகன்சாமி மற்றும் ஐயப்பா சேவா நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.