பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த ஆலோசனை!
ADDED :3627 days ago
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்த ஆலோசனை கூட்டம், வரும், 6ம் தேதி, நடக்க உள்ளது. இதுகுறித்து கோவில் துணை ஆணையர் மாரிமுத்து விடுத்துள்ள அறிக்கை: சத்தியமங்கலம் அருகே உள்ள, பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. தற்போது கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆலோசனை கூட்டம், வரும், 6ம் தேதி, காலை, 10.30 மணிக்கு, பண்ணாரி மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நன்கொடையாளர்கள், பறம்பரை அறங்காவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.