உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகத்தீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்!

அகத்தீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்!

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த சாத்தமங்கலம், நகராமலை கிராமத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி அகத்தீஸ்வரர், ஐயனார் கோவில்  மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதற்கான பூஜை கடந்த 30ம் தேதி காலை தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அன்று  இரவு முதல்கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி, திவ்ய உபச்சாரம், திருமுறை சமர்ப்பணம், தீபாராதனை நடந்தது. மறுநாள் 31ம் தேதி இரண்டு மற்றும்  மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. நேற்று காலை 6.00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை யாகசாலா மண்டப ஆராதனம், நாடி சந்தானம்,  தத்வார்ச்சனையை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:45 மணிக்கு ஐயனார், செல்லியம்மன் கோவில் விமான கும்பாபிஷேகம்  10:00 மணிக்கு அகத்தீஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில்  அறங்காவலர் ராமலிங்கம் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !