உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளையானந்த சுவாமி குருபூஜை இன்று துவக்கம்

வெள்ளையானந்த சுவாமி குருபூஜை இன்று துவக்கம்

செஞ்சி: கருமாரப்பட்டி வெள்ளையானந்த சுவாமிகளின் 3ம் ஆண்டு குருபூஜை இன்று துவங்குகிறது. செஞ்சி தாலுகா, அவலூர்பேட்டை அருகே உள்ள கருமாரப்பட்டி ஜீவ சமாதி அடைந்த வெள்ளையானந்த சுவாமிகளின் 3ம் ஆண்டு குரு பூஜை, ஆராதனை விழா இன்று துவங்குகிறது. இன்று காலை 9:00 மணிக்கு மங்கள இசையும், மாலை 3:00 மணிக்கு இன்னிசை சொற்பொழிவும் நடக்க உள்ளது. நாளை (3ம் தேதி) அதிகாலை 5:00 மணிக்கு கோ பூஜை, திருவடி புகழ், அகவல் பாராயணம், சன்மார்க்க கொடியேற்றம், விநாயகர் பூஜை, விசேஷ ஹோமம், சாதுக்கள் மஹேஸ்வர பூஜை மகா தீபாராதனையும் நடக்க உள்ளது. மாலை 3 மணியளவில் சொற்பொழிவும், 7:00 மணிக்கு சுவாமிகளின் திருவீதி உலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !