விழுப்புரம் நகரத்தில் கல்லறை திருவிழா
ADDED :3626 days ago
விழுப்புரம்: விழுப்புரத்தில் கிறித்துவர்கள் கல்லறை திருவிழா நடந்தது. விழுப்புரம் நகரில் உள்ள சி.எஸ்.ஐ.,- ஆர்.சி., மற்றும் டி.எல்.சி., ஆகிய கல்லறைகளில் கிறித்துவர்கள், தங்கள் முன்னோர்களின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர். கல்லறை திருவிழாவையொட்டி, தங்களின் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து, வழிபாடு செய்தனர். பின், கிறித்துவ தேவாலய பங்குத் தந்தைகள் மூலம் பிரார்த்தனை செய்தனர். நினைவிடங்கள் முன், மெழுகுவர்த்தி ஏற்றி, சிறப்பு வழிபாடு செய்தனர். விழுப்புரம் சி.எஸ்.ஐ., கல்லறையில் நடந்த வழிபாடு நிகழ்ச்சியில் ஆயர் ஜான் தயானந்தம், செயலாளர் ஜாஸ்லின் தம்பி, பொருளாளர் ஜெயச்சந்திரன், உறுப்பினர்கள் ஒய்டானியல், தன்சிங், வின்சென்ட் கின்சிலிங் கலந்துக் கொண்டனர்.