உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோவிலில் டிச. 10ல் வைகுண்ட ஏகாதசி திருவிழா!

ஸ்ரீரங்கம் கோவிலில் டிச. 10ல் வைகுண்ட ஏகாதசி திருவிழா!

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், டிசம்பர், 10ம் தேதி நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்காக, நேற்று காலை முகூர்த்த கால் நடப்பட்டது. பூலோகத்தில், வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக கருதப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு வாய்ந்தது. வைகுண்ட ஏகாதசி விழாவில், பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நிறைவு நாளில், சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழாவில், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு, ஜனவரி, 1ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா, டிசம்பர், 10ம் தேதி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 10 மணிக்கு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட முகூர்த்தக்கால், ஆயிரங்கால் மண்டபம் அருகில் நடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !