உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்லறை திருநாளில் கிறிஸ்தவர் அஞ்சலி

கல்லறை திருநாளில் கிறிஸ்தவர் அஞ்சலி

சேலம்: சேலம் குழந்தை ஏசு பேராலயம் எதிரே உள்ள, கல்லறை தோட்டத்தில், தங்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து, ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் கல்லறை திருநாளான நேற்று அஞ்சலி செலுத்தினர். சேலம் குழந்தை ஏசு பேராயலம் எதிரே உள்ள, கல்லறை தோட்டத்தில் காலை முதலே ஒன்று கூடிய குடும்ப உறுப்பினர்கள், இறந்து போன தங்கள் முன்னோர்களை நினைவு கூறும் வகையில், அவர்களை புதைத்த கல்லறைகளை சுத்தம் செய்தனர். பல வண்ண பூக்களால் அலங்கரித்தனர். வாசனை ஊதுபத்திகள் ஏற்றியும் மெழுகுவர்த்திகளை ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். குழந்தை ஏசு பேராலய பங்கு தந்தை கிரகோரி ராஜன் மற்றும் இணை பங்கு தந்தை பெனடிக்ட் ஆனலின் ஆகியோர் அனைத்து கல்லறைகளுக்கும் சிறப்பு திருப்பலி நடத்தினர். இதில், ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதே போல் காக்காயன் மயானம் அருகே உள்ள கல்லறை தோட்டம், அன்னதானப்பட்டி கல்லறை தோட்டம், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கல்லறை தோட்டம் என அனைத்து இடங்களிலும், தங்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்கள் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !