கோவிலில் பலிபீடம் அமைத்துள்ளது ஏன்?
ADDED :3763 days ago
பாவமன்னிப்பு என்னும் உயர்ந்த கோட்பாடே பலிபீட தத்துவம். பொதுவாக பலியிடுதல் என்பதற்கு அழித்தல்அல்லது போக்குதல் என்று பொருள். கோவிலுக்குள் நுழைந்ததும், பலிபீடத்தின் முன் நமஸ்காரம் செய்வதன் மூலம் செய்த பாவத்தைப் போக்கி நம்மை புனிதமாக்கிக் கொள்கிறோம். அதன்பிறகே, மூலஸ்தானம் சென்று கடவுளை வணங்க வேண்டும். வழிபாடு முடிந்து வெளியேறும் போதும் அங்கே வழிபட்டு பாவத்தில் ஈடுபடாமல் வாழ்வதற்காக வேண்டிக் கொள்ள வேண்டும்.