உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை!

அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை!

தர்மபுரி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில், பைரவருக்கு சிறப்பு பூஜைகள், யாக பூஜை நடந்தது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை காலைபைரவர் கோவிலில், அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை, 6 மணிக்கு, பைரவருக்கு அஷ்ட பைரவர்யாகம், அஷ்டலஷ்மியாகம், தனகார்சனயாகம், குபேரயாகம், அதிருந்ராயாகம் உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடந்தது. மேலும், பைரவருக்கு, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜை, நான்கு வேத பாராயணம் ,சிறப்பு உபசார பூஜைகள் நடத்தப்பட்டு, மங்கள ஆர்த்தி நடத்தது. பைரவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், தங்களது வேண்டுதலுக்காக, சாம்பல் பூசணி, தேங்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !