உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் முருகன் கந்தசஷ்டி விழா நவ.12ல் துவங்குகிறது!

திருச்செந்தூர் முருகன் கந்தசஷ்டி விழா நவ.12ல் துவங்குகிறது!

துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோயிலில், கந்தசஷ்டி விழா நவ., 12 ல் யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. நவ., 17ல் சூர சம்ஹாரம் நடக்கிறது. முருகனின் இரண்டாம் படை வீடு திருச்செந்துார். இங்கு முருகபெருமான் சூரனை சம்ஹாரம் செய்து, சிவ பெருமானை வழிபட்ட புகழ் பெற்ற திருத்தலம். இந் நிகழ்ச்சியைக் காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.யாகசாலை பூஜை: கந்தசஷ்டி விழா நவ., 12 ல் துவங்குகிறது. அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்படும்.1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை. 2 மணிக்கு உதயமார்தாண்ட அபிஷேகம். காலை 5.15 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலை பூஜைக்கு புறப்படுகிறார். 6.30 க்கு யாகசாலை பூஜையுடன் விழா துவங்குகிறது. ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளுகிறார். வீர வாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன், சண்முகவிலாச மண்டபத்தில் மதியம் 1.30 மணிக்கு எழுந்தருளுகிறார். பின் ஜெயந்தி நாதர் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதி வலம் வந்து கோயில் வந்து சேர்கிறார். துவக்க நாளான நவ., 12 ல் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்குவர். திருவிழா நாட்களில் தினசரி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். கோயிலில் உள்ள மண்டபத்தில், தினசரி கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கவுள்ளன. சூரசம்ஹாரம்: நவ.,17 ல் அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.நவ., 18 மாலை 5.30 மணிக்கு முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்கவுள்ளது.தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடற்கரையில் கோபுரம் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !