உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி சுந்தரேசர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!

புதுச்சேரி சுந்தரேசர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!

புதுச்சேரி: சுந்தரேசர் கோவிலில், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கோரிமேடு, திருநகர், அங்கையற்கண்ணி உடனுறை சுந்தரேசர் கோவிலில், 10ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம், விக்னேஸ்வர பூஜை துவங்கியது. விழாவில், நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு, சுவாமி திருக்கல்யாண உற்சவம், மகா தீபாராதனை நடந்தது.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அறக்கட்டளை தலைவர் பாலையா, பூபதி, இளங்கோ, செங்குட்டுவன், ஜெயபாலன், கார்த்திகேயன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !