வீரவநல்லூர் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :5284 days ago
திருநெல்வேலி : வீரவநல்லூர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.வீரவநல்லூர் செண்பகவல்லி அம்மன் கோயிலில் அப்பர் உழவாரப்பணி மன்றம், பக்தர் பேரவை சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்த பேரவை தலைவர் முத்தையா தலைமை வகித்தார். இசக்கி கண்ணன் வரவேற்றார். ஆசிரியர்கள் அண்ணாத்துரை, முத்துகிருஷ்ணன் வாழ்த்தி பேசினர். ராமன் "குருவும், சீடனும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சமய பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை உழவாரப்பணி மன்ற செயலர் இசக்கியப்பன் செய்து நன்றி கூறினார். சிவாச்சாரியார் குலசேகரன் அபிஷேக, ஆராதனை செய்தார்.