சேலம் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி சிறப்பு பூஜை!
சேலம்: கந்த சஷ்டி விரதம் நாளை துவங்க உள்ள நிலையில், சேலம் முருகன் கோவில்களில்
சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து முருகன் கோவில்களிலும், நாளை கந்தசஷ்டி விரதம் துவங்குகிறது. சேலத்தில்
பக்தர்கள் விரதம் மேற்கொள்ள வசதியாக, நாளை காலை, 5 மணிக்கு கோவில்களில் நடை
திறக்கப்படுகிறது. சேலம், கந்தாஸ்ரமம் முருகன் கோவிலில், கந்த சஷ்டி விரதம் நாளை
காலையில், கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. சேலம், காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில், இன்று காலையில் கொடியேற்றம், நாளை காப்பு கட்டுதல் நடக்கிறது. சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை முருகன் கோவில், அம்மாபேட்டை குமரகிரி தண்டாயுதபாணி கோவில், செங்குந்தர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், செவ்வாய்ப்பேட்டை செட்டிச்சாவடி சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் என, சேலம் மாநகர், புறநகர் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விரதத்தை முன்னிட்டு, நாளை காலையில் சிறப்பு அபிஷேகம், பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.