பழநி மலைக்கோயில் ரோப்கார் இயக்கம்!
ADDED :3658 days ago
பழநி: பழநி மலைக்கோயில் ரோப்கார் 11 நாட்களுக்கு பின் சிறப்பு பூஜையுடன் நேற்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயங்கப்பட்டது. பழநி மலைக்கோயிலுக்கு 3 நிமிடத்தில் எளிதாக பக்தர்கள் செல்லும் வகையில் காலை 7 மணி முதல் இரவு 9மணி வரை ரோப்கார் இயங்குகிறது. மதியம் 1.30 மணி முதல் 2.30மணி வரை மட்டும் நிறுத்தப்படும். ரோப்காரில் புதியகம்பி வடக்கயிறு பொருத்தும் பணிக்காக அக்.,31ல் நிறுத்தப்பட்டது. ராஞ்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட கம்பிவடக் கயிறுபொருத்தப்பட்டு 8 பெட்டிகளில் குறிப்பிட்ட அளவு எடை கற்கள் வைத்து சில நாட்களாக சோதனை ஓட்டம் நடந்தது. ரோப்கார் கமிட்டி அனுமதியுடன் நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டது. பூஜையில் கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், உதவிஆணையர் மேனகா பங்கேற்றனர்.