குரும்பூர் அருகே புதைந்த சிவன் கோயிலை தோண்ட வேண்டும்!
குரும்பூர் : குரும்பூர் அருகே புதைந்து கிடக்கும் சிவன் கோயிலை தோண்டி வெளிக்கொண்டு வரவேண்டும் என இந்து முன்னணி கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆழ்வை., கிழக்கு ஒன்றிய இந்து முன்னணி ஆலோசனை கூட்டம் குரும்பூர் அருகே உள்ள கட்டையனுர் பிரம்மசக்தி அம்மன் கோயிலில் ஒன்றிய தலைவர் ஓடை முருகேசன் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் செந்தில்செல்வன், செயலாளர்கள் வேல்ராஜ், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேலன் கலந்து கொண்டார். கூட்டத்தில் குரும்பூர் அருகே உள்ள சுகந்தலை கிராமத்தில் பழமையான சிவன் கோயில் புதையுண்டு கிடக்கிறது. இதனை தோண்டி வெளிக்கொண்டு வரவேண்டும். குரும்பூர் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக 25 விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து திருச்செந்தூரில் விஜர்சனம் செய்ய வேண்டும். பஜாரில் உள்ள மூன்று சந்திப்பு சாலை, இறைச்சிகடை பகுதி ரோடு ஆகியவற்றில் வேகத்தடை அமைக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர தலைவர் காமராஜ், செயலாளர் திருமுருகன், கச்சனாவிளை தலைவர் கணேசன், வடலிவிளை ராஜா, துரைச்சாமிபுரம் சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.