திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி கொடியேற்றம்
ADDED :3661 days ago
திருமலைக்கேணி : திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. காலையில் வாஸ்துபூஜை, கணபதி ஹோமத்தை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து யாகசாலை பூஜை, லட்சார்ச்சனை, சுவாமி புறப்பாடு உள்ளிட்ட நகழ்ச்சிகள் நடந்தது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நவ., 16 அன்று வேல் வாங்குதல், 17 அன்று சூரசம்ஹாரம், 18 அன்று திருக்கல்யாணம் ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.