உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மாசியில் நடத்த ஏற்பாடு

சூலக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மாசியில் நடத்த ஏற்பாடு

பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும் மாசி மாதம் நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதியில் பிரசித்தி பெற்றது, சூலக்கல் மாரியம்மன் கோவில். வார நாட்களில் மட்டுமல்லாது விஷேச நாட்களில், அம்மனை பக்தர்கள் தரிசிப்பர். தீபாவளியன்றும், நேற்று முன்தினமும், கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. கோவில் திருப்பணிகளாக, மதில் சுவர் சீரமைத்தல் மற்றும், 27.5 லட்சம் மதிப்பில், 14 அடி உயர, தேர் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. கும்பகோணம் மற்றும் பழனியை சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட சிற்பிகள் ஈடுபட்டுள்ளனர். வரும் சில நாட்களில், கோவில் வளாக தரைத்தளம் சீரமைக்கப்பட்டு, மதில் சுவருக்கு, வர்ணம் பூசும்பணி துவங்க உள்ளது; பணிகள், ஒரு மாதத்துக்குள் முடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்ததும், மாசி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !