உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா கொடியேற்றம்!

புதுச்சேரி சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா கொடியேற்றம்!

புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில்,  கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா வரும் 17ம் தேதி நடக்கிறது. லாஸ்பேட்டை சிவசுப்ரமணியர் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா, கடந்த 11ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வரும் 17ம் தேதி வரை, அலங்கரிக்கபட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. இரவு 7.௦௦ மணியளவில் சூரசம்ஹாரத்திற்கு முத்து ரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 18ம் தேதி திருக்கல்யாணம், 19ம் தேதி மஞ்சள் நீராட்டு, 20ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 21 ம் தேதியுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !