ஸ்ரீவி., ஐயப்பன் கோயிலில் கார்த்திகை விழா: 17ல் துவக்கம்
ADDED :3661 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி திருக்கோயிலுடன் இணைந்த ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயிலில் 47வது ஆண்டு கார்த்திகை விழா மற்றும் மண் டலபூஜை விழா வரும் 17ம்தேதி துவங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 15 வரை நடக்கிறது. விழாவினை முன்னிட்டு 27 வரை தினமும் இரவு 7மணிக்கு ஆன்மிக நிகழ்ச்சி நடக்கிறது. மண்டலபூஜைகள் டிசம்பர் 27ம்தேதி துவங்குகிறது.