உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தான்தோன்றி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

தான்தோன்றி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த, சிங்களாந்தபுரத்தில் தான்தோன்றி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான விழா, நவம்பர் 3ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதையடுத்து, நவம்பர் 11ம் தேதி பூவோடு எடுத்தல், அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, 12ம் தேதி சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், மாவிளக்கு படையலிட்டு பூஜை செய்தனர். ஏராளமான பக்தர்கள் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று அம்மன் சத்தாபரணம், வண்டிவேஷம், வானவேடிக்கை நடக்கிறது. தொடர்ந்து நவம்பர், 14ம் தேதி கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !