பூவோட்டு அம்மன் கோவிலில்: நவ., 15ல் கும்பாபிஷேக விழா
நாமக்கல்: திருமலைப்பட்டி, பூவோட்டு அம்மன் கோவிலில், நவம்பர், 15ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. நாமக்கல் அடுத்த, திருமலைப்பட்டியில் பூவோட்டு அம்மன் கோவில் உள்ளது. கோவில் திருப்பணி மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், நவம்பர், 15ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய விழாக்குழுவினர் முடிவு செய்தனர். விழாவை முன்னிட்டு, இன்று காலை, 7 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வருதல், மாலை 4 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், வாஸ்துசாந்தி, முதல்கால யாகவேள்வி, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (நவ., 14) காலை, 5 மணிக்கு, இரண்டாம் கால யாகவேள்வி, புதிய மூர்த்திகள் கண் திறப்பு, மாலை விநாயகர் வழிபாடு, கோ பூஜை நடக்கிறது. 15ம் தேதி, அதிகாலை, 5 மணிக்கு, நான்காம் காலயாக வேள்வி, நாடி சந்தானம், தீபாராதனையும், காலை, 9 மணிக்கு, யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு, அதை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடக்கிறது.