உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர் ஸ்வாமிக்கு தைல காப்பு அபிஷேகம்

ராகவேந்திரர் ஸ்வாமிக்கு தைல காப்பு அபிஷேகம்

ஈரோடு: ஈரோடு காவிரிக்கரை ராகவேந்திர ஸ்வாமி, ஆஞ்சநேயருக்கு நேற்று தைல காப்பு அபிஷேகம் நடந்தது. மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது போல் முனிவர்கள், சன்னியாசிகள் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தீபாவளி கொண்டாடுகின்றனர். இந்த நாளை கன்னடத்தில் பலி பாட்டியம் என்று கூறுவர். இதையொட்டி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு ராகவேந்திரர், ஆஞ்சநேயருக்கு நேற்று காலை அபிஷேகம் நடந்தது. சுமார் எட்டு லிட்டர் சந்தனம் மற்றும் வாசனை திரவிய பொருட்களை கொண்டு ராகவேந்திரர், ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடந்தது. தைல காப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !