கிராம பூஜாரிகளுக்கு இலவச ஆகம பயிற்சி
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலையில், கிராம கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில், கோவில் வழிபாடு பயிற்சி முகாம் நடக்கிறது. ஆனைமலை காந்தி ஆசிரமத்தில், நாளை முதல், 18ம் தேதி வரை நடக்கும் முகாமை, ஆர்ஷா வித்யா பீட தலைவர் ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள் துவக்கி வைக்கிறார். முதல் நிலை பயிற்சி பெற்றவர் களுக்கு, மேல்நிலைப் பயிற்சி வழங்கப்படுகிறது. காலை, 6:00 முதல், இரவு, 8;00 மணி வரை வகுப்புகள் நடக்கின்றன. கணபதி ேஹாமம், புண்யாக வாசனம், கிரகப்பிரவேசம், நவக்கிரக ேஹாமம், திருமண வைபவ முறைகள், வாஸ்து, சித்த மருத்துவம் மற்றும் ஜோதிடம் உட்பட ஆன்மிக விஷயங்கள் கற்றுத்தரப்படுகின்றன. துாத்துக்குடி வேத பாடசாலை முதல்வர் சுப்ரமணிய கனபாடிகள், தென்னிந்திய புரோகிதர் சங்கத் தலைவர் நரசிம்ம ஐயர், ஜெயமுரளி குருக்கள், ராமமூர்த்தி சர்மா, கண்ணன் பட்டாச்சார்யா, கிருஷ்ண பிரேமை சவுந்திரராஜன், பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படும் என, பேரவையின் நிர்வாக அறங்காவலர் சவுந்திரராஜன் கூறினார்.