உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கோவிலில் கந்தர் சஷ்டி விழா

செஞ்சி கோவிலில் கந்தர் சஷ்டி விழா

செஞ்சி: கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் கந்தர் சஷ்டி விழா துவங்கியது. செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தரவிநாயகர் கோவிலில் 34வது ஆண்டு கந்தர் சஷ்டி விழா கடந்த நேற்று துவங்கியது. நேற்று மாலை 6:00 மணிக்கு சுந்தரவிநாயகர், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். உற்சவர் முருகப்பெருமான் திருமுருகன் தோற்றம் அலங்காரத்தில் காட்சியளித்தார். இரவு 7 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இன்று தந்தைக்கு உபதேசம், 14ம் தேதி தாருகன் வதம், 15ம் தேதி சிங்கமுகன் வதை, வீரபாகு தூது, 16ம் தேதி வேல்வாங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !