உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏரல் சேர்மன் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா!

ஏரல் சேர்மன் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா!

ஏரல் : ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா (30ம் தேதி) நடக்கிறது. இதை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தங்கியுள்ளனர். புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடக்கிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் முக்கிய நாள் அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை வழிபட்டு செல்கின்றனர். இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி கோயில் வலம் வருதல் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய விழாவான ஆடி அமாவாசை விழா நிகழ்ச்சிகள் 30ம் தேதி நடக்கிறது. நாளை பகல் 1 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி, சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 8 மணிக்கு 1ம் காலம் கற்பகபொன் சப்பரத்தில் எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது. 31ம் தேதி 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், பச்சைசாத்தி அபிஷேகம், 3ம் காலம் பச்சைசாத்தி தரிசனம் மற்றும் கோயில் மூலஸ்தானம் சேருதல் நடக்கிறது. திருவிழாவின் கடைசிநாள் நிகழ்ச்சி வரும் 1ம் தேதி நடக்கிறது. ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !