11 கிராமங்களை சேர்ந்த பெண்கள் கோவிலில் பொங்கல் வழிபாடு
ADDED :5197 days ago
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே 11 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். உளுந்தூர்பேட்டை அடுத்த எம்.குன்னத்தூர் கிராமத்தில் ஸ்ரீதானத்து ஐயனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 12 கிராமங்களில் பிறந்த பெண்கள் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். இதன்படி ஐந்தாண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம் இக்கோயிலில் எம்.குன்னத்தூர், நன்னாரம், கிளியூர், மாம்பாக்கம், களவனூர், கிளப்பாளையம், குச்சிப்பாளையம், சீக்கம்பட்டு, தாமல், எதலவாடி, ஆத்தூர் ஆகிய 11 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.