உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உருளையன்பேட்டையில் ஆடம்பர தேர் பவனி

உருளையன்பேட்டையில் ஆடம்பர தேர் பவனி

புதுச்சேரி : உருளையன்பேட்டை புனித புதுமை அந்தோணியார் கோவில் ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது.விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. பிற்பகல் 12 மணிக்கு ஜெப வழிபாடும், மாலை 6.30 ஆடம்பர தேர்பவனி நடந்தது. துவக்க விழாவில் அரசு கொறடா நேரு, தொழில் அதிபர் சிவக்கொழுந்து நெல்லித்தோப்பு பங்கு தந்தை குழந்தைசாமி, அருட்தந்தைகள் பிச்சைமுத்து, நெப்போலியன், துணை பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தேர்பவனி உருளையன்பேட்டையிலுள்ள முக்கிய வீதிகள் வழியாக வந்தது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !