உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

அனுப்பர்பாளையம் : சிறுபூலுவப்பட்டி, ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீபட்டத்தரசியம்மன், ஸ்ரீகருப்பராயன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கடந்த, 13ல், காலை, 8:00க்கு, யாக சாலை பூஜை, கணபதி பூஜை, கோ பூஜைகளுடன் விழா துவங்கியது. தினமும் யாக சாலை பூஜைகள், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவில் அர்ச்சகர் சவுந்தரராஜ சிவாச்சாரியார், முருங்கப்பாளையம் மாகாளியம்மன் கோவில் அர்ச்சகர் ஈசான சிவஞான சிவாச்சாரியார், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் மாணிக்க சிவாச்சாரியார் உள்ளிட்டோர், யாக சாலை பூஜை நடத்தினர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, யாக சாலையில் நிறைவேள்வி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பின், மூலவர் சித்தி விநாயகர் கோபுரத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கருப்பராயன், கன்னிமார் சுவாமி, பெருமாள், பட்டத்தரசியம்மன் <உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் சித்தி விநாயகர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !