உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்கேணியில் கந்தசஷ்டி விழா

திருமலைக்கேணியில் கந்தசஷ்டி விழா

திருமலைக்கேணி: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. காலை சிறப்பு அபிஷேகம், யாக பூஜை, லட்சார்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி புறப்பாடாகி அருணகிரிநாதர் சன்னதி முன்பு முருகன் நடனமாடும் காட்சி நடந்தது. நாளை வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. மறுநாள் சூரசம்ஹாரம் நடைபெறும். சதுர்த்தி பூஜை: சதுர்த்தியை முன்னிட்டு வளாகத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், சந்தனம், பன்னீர், விபூதி, இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. சுவாமிக்கு அருகம்புல் மற்றும் எருக்கம்பூ மாலை உள்ளிட்ட அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை பூஜைகள் நடந்தது. சுற்றுவட்டாரத்ததை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !