கார்த்திகை 1ல் ஐயப்ப சுவாமிக்கு பக்தர்கள் மாலை அணிந்தனர்
ADDED :3625 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், கார்த்திகை மாதத்தையொட்டி, 500க்கும் மேற்பட்டோர் விரதமிருந்து ஐயப்பனுக்கு மாலை அணிந்தனர். பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், கார்த்திகை மாதத்தையொட்டி அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறப்பு நிகழ்ச்சியும், காலை, 4:15 மணிக்கு கணபதி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு அபிேஷகம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகளும் நடந்தது. பின், சிறப்பு அலங்காரத்தில், கோவில் வளாகத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதனைத்தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், விரதமிருந்து சபரிமலைக்கு மாலை அணிந்தனர். பின், சுவாமியே சரணம் ஐயப்பா என கோஷம் எழுப்பி, பஜனை பாடல்களையும் பாடினர்.