உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்தி மலைக்கோவில்களில் சஷ்டி விழா கோலாகலம்

சத்தி மலைக்கோவில்களில் சஷ்டி விழா கோலாகலம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது. சத்தியமங்கலம் கொமராபாளையத்தில் மலைக்கோவில் என்று அழைக்கப்படும் தவளகிரி தண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு, நேற்று காலை ஆறு மணிக்கே பக்தர்கள் குவிய தொடங்கினர். முருகனுக்கு பல்வேறு அபி?ஷகங்கள் நடந்தன. பின் அலங்கார பூஜை நடந்தது. இதேபோல், சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோவில் உள்ள முருகனுக்கு சந்தன அபி?ஷகம் நடந்தது. வடவள்ளி பாலமுருகன் கோவில், எரங்காட்டூர் வேல்முருகன் கோவில், கெம்மநாய்க்கன்பாளையம் பாலதண்டாயுதபாணி கோவில்களிலும் கந்த சஷ்டி விழா, வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !