லட்சுமி ஹயக்ரீவர் மஹா யாகம்: ஐயப்பா சேவா சங்கம் ஏற்பாடு
கரூர்: கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் சார்பில், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் மஹா யாகம் வரும், 24ம் தேதி நடக்கிறது. கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 29ம் ஆண்டை முன்னிட்டு லட்சுமி ஹயக்ரீவர் மஹா யாகம், நட்சத்திர யாககம், ஸ்ரீ ராஜமாதங்கி யாகம், ஏகதின லட்சார்ச்சனை, சீதா கல்யாணம், ஸ்ரீ ஹனுமந் ஜெயந்தி உற்சவம் வரும், 24ம் தேதி முதல் 2ம் தேதி வரை கரூர் ஈஸ்வரன் கோவில் அருகிலுள்ள ஐயப்பன் கோவிலில் நடக்கிறது. இந்த யாகம் முன்னிட்டு, வரும், 24ம் தேதி அதிகாலை, 5 மணி முதல் மணிக்குள் கொடியேற்று விழா நடக்கிறது. இதைத் தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதர்சன ஹோமம், நட்சத்திர ஹோமம் ராஜமாதங்கி ஹோமம் முடிந்ததும், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் மஹா ஹோமம் நடக்கிறது. மறுநாள், 25ம் தேதி அமராவதி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து ஐயப்ப ஸ்வாமிக்கு மஹா அபிசேகம் செய்து முடிந்ததும், காலை, 9 மணிக்கு ஏகதின லட்சார்ச்சனை துவங்குகிறது. மதியம், 12 மணிக்கு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்று, மாலை 6 மணிக்கு குத்துவிளக்கு பூஜை நடக்கிறது. அன்றிரவே இரவு, 8 மணிக்கு வீரமணிதாசன் குழுவினரின் பக்தி இன்னிசை நடக்கிறது. மறுநாள், 26ம் தேதி மற்றும், 27ம் தேதியில் ஸ்ரீ சீதா கல்யாண உற்சவத்தை, விழுப்புரம் ஜெயதீர்த்த பாகவதர் நடத்தி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை, கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.