உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபத்திருவிழா: தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா

தீபத்திருவிழா: தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா

திருவண்ணாமலை: தீபத்திருவிழாவில், தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா நேற்று நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப, இரண்டாம் நாள் திருவிழா நேற்று நடந்தது. காலை விநாயகர் மூஷிக வானத்திலும், சந்திரசேகரர் தங்க சூரிய பிரபை வாகனத்திலும், இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சமேத வள்ளி தெய்வானை முருகர் மயில் வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி இந்திர விமானத்திலும், பராசக்தி அம்மன் சிறிய வெள்ளி இந்திர விமானத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி நந்தி வாகனத்திலும் வீதி உலா வந்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !