காரிமங்கலம் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா
காரிமங்கலம்: கந்த சஷ்டியை முன்னிட்டு, முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு அபி?ஷக, ஆராதனைகள் மற்றும் சூரசம்ஹார விழா நடந்தது. காரிமங்கலம் மந்தைவீதி ராஜகணபதி, பாலமுருகன் கோவிலில், கந்தசஷ்டியை முன்னிட்டு, நேற்று காலை ஸ்வாமிக்கு பாலாபிஷேகம் உட்பட, பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. காரிமங்கலம் அடுத்த, மொரசுப்பட்டி முருகர் கோவில், சென்னம்பட்டி முருகர் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய கோவிலில், காலை, 8 மணிக்கு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் லட்சார்சனை நடந்தது. இரவு, 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சொர்ண மண்டபத்தில் இருந்து ஸ்வாமி புறப்பாடும், 8 மணிக்கு, பைபாஸ் ரோட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில், சூரசம்ஹாரமும் நடந்தது. இரவு, 12 மணிக்கு, பன்னீர் அபிஷேகம் நடந்தது. தர்மபுரி நெசவாளர் நகர், சத்தி விநாயகர் வேல்முருகன் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், பாப்பாரப்பட்டி சிவசுப்பிரமணிய ஸ்வாமி, எஸ்.வி., ரோடு முருகர் கோவில், லளிகம், இண்டூர் முருகன் கோவில் உட்பட, மாவட்டத்தில் உள்ள, பல்வேறு முருகர் கோவில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், திருவீதி உலா, சூரசம்ஹாரம், வான வேடிக்கை நடந்தது.