சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கட்டாந்தரையில் தூங்கணுமா?
ADDED :3619 days ago
அந்தக் காலத்தில் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்த நாள்முதல் வெறும் தரையில் தங்களது வேட்டிகளுள் ஒன்றை விரித்து அதில் படுத்துத்தான் தூங்கினார்கள் ஐயப்ப பக்தர்கள். அன்று தரைகள் மண்தரையாக இருந்தது. தட்ப வெப்பத்தை அது சீராக வைத்திருந்தது. ஆனால், சிமென்ட், டைல்ஸ் என்றெல்லாம் வீட்டுத் தரைகள் மாறிவிட்ட இந்தக் காலத்தில் அது முடியாது. அதனால் மெத்தை, தலையணை என்று வசதிகள் இல்லாமல் மெல்லிய ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கலாம். ஐயப்ப பக்தர்கள் ஆடம்பரத்தை நாடக்கூடாது. என்பதை உணர்த்தவும், மலைப்பாதையில் கட்டாந் தரையில் வெற்றுவெளியில் உறங்குவதற்கு நீங்கள் பழக்கப்படுவதற்குமான விதிமுறையே இது.