உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய பகவானை வணங்கும் சத் பூஜை நிறைவு!

சூரிய பகவானை வணங்கும் சத் பூஜை நிறைவு!

பாட்னா: சூரிய பகவானை வணங்கும், சத் பூஜை, நேற்று காலை சூரிய உதயத்துடன் நிறைவடைந்தது. கடந்த ஞாயிறு துவங்கிய இந்த பண்டிகையை, பீஹார் மற்றும் உ.பி.,யின் கிழக்கு பகுதி மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர். இதற்காக, நாட்டில் பல பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி, கங்கை நதிக்கரையில் வழிபாடு செய்து, விருந்துண்டு மகிழ்ந்தனர். தலைநகர் பாட்னாவில், முதல்வர் நிதிஷ் குமார் வீட்டில்பெரிய அளவில் இந்த பூஜை நடைபெறாத நிலையில், முன்னாள் முதல் வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் வீட்டில் மனைவி ரப்ரி தேவியுடன், அவரின் ஏழு மகள்களும், இரண்டு மகன்களும், விமரிசையாக கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !