பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள் மதிப்பீடு
திருவனந்தபுரம் : பத்மநாப சுவாமி கோவிலில் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, சுப்ரீம் கோர்ட் நியமித்த கமிட்டி நாளை மறுநாள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பிரசித்திப் பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில், பாதாள அறைகளில் இருந்து பல கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதை அடுத்து, அக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பொக்கிஷங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்ய, சுப்ரீம் கோர்ட், 21ம் தேதி, கமிட்டியை நியமித்தது. இக்கமிட்டி, ஆகஸ்ட் முதல் தேதி திருவனந்தபுரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட், பொக்கிஷங்களை பார்வையிட்டு அவற்றின் மதிப்பு குறித்த விவரங்களை சேகரிக்க, 5 பேர் கொண்ட கமிட்டியை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இக்கமிட்டிக்கு, டில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியக இயக்குனர் ஜெனரல் ஆனந்தபோஸ் தலைவராக உள்ளார். இக்கமிட்டி, வரும் ஆகஸ்ட் முதல் தேதி பார்வையிட்டு மதிப்பீடு செய்ய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.