மாதேஸ்வரசாமி கோவில் கும்பாபிஷேகம் ஜே ஜே!
ADDED :3629 days ago
அன்னுார்: அன்னுார் மாதேஸ்வரசாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அன்னுார், மேட்டுப்பாளையம் ரோட்டில், பழமையான மங்களாம்பிகை உடனமர் மாதேஸ்வரசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா, 17ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில் காப்பு கட்டுதல், எண் வகை மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று அதிகாலையில், வேள்வி பூஜை நடந்தது. காலை, 9:40 மணிக்கு விமான கோபுரம், மாதேஸ்வரசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதன் பின் மகா அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா கமிட்டியினர், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.