நாட்டரசன்கோட்டையில் கும்பாபிஷேகம்
ADDED :3629 days ago
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கம்பர் தெரு முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 17ம் தேதி காலை 8:15 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பணி துவங்கியது. மாலை 4:35 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகளும், பூர்ணாகுதியும் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு கோ பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜையை தொடர்ந்து 2ம் கால யாகசாலை பூஜை நடந்தது. அதைதொடர்ந்து கடம் புறப்பாட்டுக்கு பின் ,காலை 10:20 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தீபாராதனை, அபிஷேகம் நடந்தது. நாராயண அய்யங்கார் தலைமையில் யாகசாலை பூஜை நடந்தது. பூஜாரிகள் ராமன், சுப்பிரமணியன் பூஜைகளை செய்தனர். தேவகோட்டை ராமநாதன் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார்.அன்னதானம் வழங்கப்பட்டது. கம்பர் தெரு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்பாட்டை செய்தனர்.